ஈரான் பேச்சுவார்த்தை குழுவினரை படுகொலை செய்ய இஸ்ரேல் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை - அறிக்கை

அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் ரகசியமாக கூடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஈரான் பேச்சுவார்த்தை குழு
ஈரான் பேச்சுவார்த்தை குழு
Published on

4 மாதங்கள் தொடர்ந்த ஈரான் - அமெரிக்கா போர், கடந்த வாரம் ஏற்பட்ட புரிந்துணர்வால் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் நடைபெற்றது.

இதனிடையே கத்தார் தலைநகர் தோஹாவிலும் இரு நாட்டு குழுக்கள் கூடி இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தும் என கூறப்பட்டது.

இருப்பினும் அதிகாரபூர்வமாக அல்லாமல் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் ரகசியமாக கூடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அறிக்கை

இந்நிலையில் ஈரான் பேச்சுவார்த்தை குழுவின் 2 முக்கிய பிரதிநிதிகளை கொலை செய்ய இஸ்ரேல் சதித்திட்டம் தீட்டுவதாக அமெரிக்க உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக பிரபல நாளேடான வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக நியூ யார்க் டைம்ஸ் நாளேடும் இதுபோன்றதொரு செய்தி அறிக்கையை வெளியிட்ட நிலையில் தற்போது வாஷிங்க்டன் போஸ்ட் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறி

அமெரிக்க உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அவ்வறிக்கையில், ஈரான் குழுவில் இருக்கும் 2 முக்கிய தலைவர்களான அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபப் ஆகியோர் இஸ்ரேலால் குறிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

படுகொலைகள் ஏதேனும் அரங்கேறினால், அது அமைதிப் பேச்சுவார்த்தைகளை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

எனவே ஈரானுக்கு இதுகுறித்து மத்தியஸ்தர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா எச்சரித்துள்ளதாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com