எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்து

எரிபொருள் நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்து
Published on

பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இன்று (மே 15) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மோடி சென்றடைந்தார்.

அவரை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் வரவேற்று அழைத்துச் சென்றார்.

தொடர்நது இரு தலைவர்களும் இரு நாட்டு உறவுகள் மற்றும் நலன்கள் குறித்து உரையாடினார். குறிப்பாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமீரகத்துக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி எந்தவித தடைமின்றி திறந்திருக்க வேண்டும் என்ற கருத்தில் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.

தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுக்கு எரிவாயுவை விநியோகிப்பது தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.

அதனுடன் இந்தியாவிலேயே எரிபொருளை உற்பத்தி செய்யும் நடவடிக்கையின் தொடக்கமாக இந்தியாவில் பெட்ரோலிய மூலங்களை கண்டுபிடிப்பது தொடர்பாகவும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 3.4 சதவீதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com