யு.ஏ.இ மீதான தாக்குதல் ஏற்கத்தக்கதல்ல: மேற்காசிய அமைதிக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது- பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்த நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
யு.ஏ.இ மீதான தாக்குதல் ஏற்கத்தக்கதல்ல: மேற்காசிய அமைதிக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது- பிரதமர் மோடி
Published on

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் 5 நாள் பயணமாக 5 நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.

முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். இங்கு இரண்டரை மணி நேரமே செலவழித்தார். அப்போது ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி 2 நாட்டு உறவு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும், மேற்கு ஆசிய நாடுகளுக் கிடையேயான மோதல் குறித்தும், எரிபொருள் விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக மூலோபாய ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்திய பிரதமர் மோடி, "ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டு வர சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் விரிவுப்படுத்த இந்தியா தயாராக இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் மீதான இலக்கு ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. எனினும், தற்போதைய சூழலை ஐக்கிய அரபு அமீரகம் நிதானத்துடன் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது" என்றார்.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போரின்போது அமெரிக்கா ராணுவ தளங்களை குறிவைத்து ஐக்கிய அரபு அமீரகம் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது ராணுவ தளங்களை தவிர்த்து பொதுச் சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்திய பிரதமர் மோடி நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com