ஜெர்மனி: குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி

குழந்தையை யார் வளர்ப்பது என்ற குடும்பத் தகராறு காரணமாக இந்தத் சம்பவம் நடந்திருக்கலாம்.
ஜெர்மனி: குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி
Published on

ஜெர்மனியில் குழந்தைகள் நலக் காப்பகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் நகரில் டான்கெர்ஸ்ட்ராஸ்ஸே பகுதியில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகம் ஒன்றில் நேற்று இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

பலி

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவ இடத்திலேயே நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 5 பேர் ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பலியான 6 பேரும் அந்த மையத்தின் ஊழியர்கள் என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலில் மேலும் சிலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது

தாக்குதல் நடந்த இந்த மையத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் தற்காலிகமாகத் தங்குவதற்கான தங்கும் விடுதி வசதிகளும் செயல்பட்டு வந்தது.

குழந்தையை யார் வளர்ப்பது என்ற குடும்பத் தகராறு காரணமாக இந்தத் சம்பவம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த சதியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்ற இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com