நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடி கைது

கே.பி.சர்மா ஒலியின் வீட்டிற்குள் புகுந்த காவல்துறையினர் அவரை திடீரென கைது செய்தனர்.
நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடி கைது
Published on

நேபாளத்தின் பக்தாபூர் மாவட்டம் குண்டுவில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 5 மணிக்கு முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலியின் வீட்டிற்குள் புகுந்த காவல்துறையினர் அவரை திடீரென கைது செய்தனர்.

சர்மா ஒலியுடன் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக்கையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

நேபாளத்தில் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற 24 மணிநேரத்திற்குள் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் நடைபெற்ற Gen Z போராட்டங்களில் 77 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்குகளில் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com