125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை... ஆஸ்திரேலிய ராணுவத்தை வழிநடத்தப் போகும் பெண் தளபதி!

ஆஸ்திரேலிய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் நியமிக்கப்பட்டுள்ளார்.
For the first time in its 125-year history... A woman to lead the Australian Army!
Published on

ஆஸ்திரேலிய வரலாற்றில் 125 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத்திற்கு தலைமை தாங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் இந்தாண்டு ஜுலை முதல் அந்நாட்டின் ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2030ம் ஆண்டுக்குள் ராணுவத்தில் பெண்களில் பங்கு 25 சதவீதம் இருக்கவேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒருபகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலிய ராணுவத்தில் பெண்களில் பங்கு 21 சதவீதமாகவும், தலைமைப் பொறுப்புகளில் 18.5 சதவீதமும் உள்ளனர்.

55 வயதான சூசன் 1987-ல் இராணுவத்தில் சேர்ந்தார். தற்போது 'கூட்டுத் திறன்களுக்கான' (Chief of Joint Capabilities) தலைவராக பணியாற்றி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com