வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 589 ஆக அதிகரிப்பு

இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடுமுழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.
earthquake
Published on

வெனிசுலாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின.

நிலநடுக்கங்கள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், வெனிசுலா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. 2980-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்த இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மக்கள் அனைவரும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்கவேண்டும். இடிந்த கட்டிடங்களில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com