சீன பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக தொழிற்சாலை நிர்வாகிகளைப் போலீசார் கைதுசெய்தனர்.
சீன பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
Published on

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரின் லியுயாங் பகுதியில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது.

கடந்த 4-ம் தேதி மாலை 4:43 மணியளவில் அங்கு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதன் தாக்கம் 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உணரப்பட்டது.

இந்த வெடிவிபத்தில் 20க்கும் அதிகமானோர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் 61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர்.

வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தின் அருகில் வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால் அப்பகுதி மக்கள் உடனே வெளியேற்றப்பட்டனர்.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக தொழிற்சாலையின் நிர்வாகிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com