2022ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக... கச்சா எண்ணெய் விலை 110 டாலரைத் தாண்டி விற்பனை #crudeoil

போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தாண்டும்
2022ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக... கச்சா எண்ணெய் விலை 110 டாலரைத் தாண்டி விற்பனை #crudeoil
Published on

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

ஈரான் -அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், 2022ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 110 டாலரைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஒருவேளை போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தாண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com