

இந்திய எல்லையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், திபெத்தியப் பகுதியில் உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையாக அமையவிருக்கும் திட்டத்தின் கட்டுமானத்தை சீன அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து உளவுத்துறையின் பிரத்யேகத் தகவல்கள் மற்றும் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் தொடர்ச்சியான எதிர்ப்புகளையும் மீறி பெய்ஜிங் இந்தத் திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறது.
முன்னதாக, சீன அரசின் இந்த அணைக்கட்டும் திட்டத்திற்கு ஜனவரி மாதத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பெய்ஜிங் நாட்டிடம் கவலை தெரிவித்தார்.
மேலும் இந்திய பங்களாதேஷில் உள்ள உள்ளுர் நாடுகளின் சுற்றுச்சூழல்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பெய்ஜிங்கை வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
மேலும் சீனாவின் அணையில் இருந்து திடீரென நீர் திறந்துவிடப்படுவதைத் தடுக்கும் ஒரு அரணாகச் செயல்படவும், இரு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கவும், சியாங் ஆற்றின் மீது ஒரு நீர்மின் அணையை இந்தியா கட்டத் திட்டமிட்டுள்ளது.