பெண் சிங்கம்.. பலுசிஸ்தான் செயல்பாட்டாளருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு - யார் இந்த மஹ்ரங் பலோச்?

1,600 கிலோமீட்டர் நடைப்பயணம் செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார் மஹ்ரங்.
மஹ்ரங் பலோச்
மஹ்ரங் பலோச்
Published on

பலுசிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் பிரபல பெண் செயற்பாட்டாளர் டாக்டர் மஹ்ரங் பலோச். இவர் பலுசிஸ்தானின் பெண் சிங்கம் என்று அழைக்கப்படுகிறார்.

போராட்டம் - கொலை

கடந்த 2024 ஜூலை 29 Gwadar-ரில் பலுசிஸ்தான் உரிமைகளுக்காக பலோச் யக்ஜெஹ்தி என்ற அமைப்பு போராட்டம் நடத்தியது.

இதில் துணை ராணுவப் படை வீரர் ஷபீர் அகமது என்பவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.

குற்றச்சாட்டு

அன்றைய தினம் போராட்டக்கரார்களை தூண்டிவிட்டு கொலைக்கு காரணமாக இருந்ததாக அவ்வமைப்பின் தலைவர் சிப்கதுல்லா மற்றும் போராட்டத்திற்கு ஆதரவளித்த மஹ்ரங் பலோச் மீது பாகிஸ்தான் அரசு கொலை மற்றும் பயங்கரவாத வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த குவெட்டா பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அலி, இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தார்.

யார் இந்த மஹ்ரங் பலோச்?

பலுசிஸ்தான் செயல்பாட்டாளராக உலகளவில் அறியப்படும் மஹ்ரங் பலோச், 33 வயதே ஆன பயிற்சி மருத்துவர் ஆவார்.

இவரது தந்தை 2009இல் பாகிஸ்தான் அதிகாரிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சகோதரரும் 2017இல் கடத்தப்பட்டார்.

பாகிஸ்தான் ராணுவத்தால் பலுசிஸ்தானில் பலர் சட்டவிரோதமாக கடத்தப்படுவதற்கு எதிராக 2023இல் பலுசிஸ்தானில் இருந்து இஸ்லாமாபாத் வரை 1,600 கிலோமீட்டர் நடைப்பயணம் செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார் மஹ்ரங்.

பிபிசியின் 100 சிறந்த பெண்கள் மற்றும் 2024 டைம்ஸ் இதழின் 100 சிறந்த பெண்கள் பட்டியலில் மஹ்ரங் இடம் பெற்றார். இந்நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com