டெல்லி, மும்பை மீது தாக்குதல் நடத்த வேண்டும் - பாகிஸ்தான் முன்னாள் ஆணையர் பரபரப்பு கருத்து | Pak

டெல்லி, மும்பை மீது தாக்குதல் நடத்த வேண்டும் - பாகிஸ்தான் முன்னாள் ஆணையர் பரபரப்பு கருத்து | Pak
Published on

இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதரக உயர் ஆணையர் அப்துல் பசித் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அவர், "ஒருவேளை அமெரிக்கா பாகிஸ்தானின் அணுசக்தி கிடங்குகளை தாக்கினால் பதிலடியாக கொஞ்சமும் யோசிக்காமல் பாகிஸ்தான் இந்தியாவின் புது டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்" என்று கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் பேசியுள்ளார்.

ஒருவேளை பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கா ஏதாவது செய்தால் அதற்கு இந்தியா தான் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தொலைவில் உள்ளதால் இந்தியாவை தாக்குவதே வெளிநாட்டு அத்துமீறலுக்கு எதிரான மூலோபாய நகர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுபோன்ற சூழல் உருவாவது அரிது என்றும் அவர் குறிப்பிட்டார். பசித் 2014 முதல் 2017 வரை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக டெல்லியில் செயல்பட்டார்.

இவர் முன்னரும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை இந்தியாவுக்கு எதிராக தெரிவித்தவர்.

ஈரான் போர், மத்திய கிழக்கு பதற்றகால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிவது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com