பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழக்கும் பயங்கரவாதிகள் .. லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட முக்கியத் தீவிரவாதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழக்கும் பயங்கரவாதிகள் .. லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை
Published on

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதி ஷேக் யூனுஸ் அப்ரிதி கொல்லப்பட்டுள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதிற்கு மிகவும் நெருக்கமானவர் ஷேக் யூனுஸ் அப்ரிதி.

ஏப்ரல் 26 அன்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், அடையாளம் தெரியாத நபர்களால் அப்ரிதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முக்கியத் தலைவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஹபீஸ் சயீதின் வலதுகரமாகக் கருதப்பட்ட அபு கத்தல் இதேபோன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த மாதம் லாகூரில் லஷ்கர் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அமீர் ஹம்சா மீது தாக்குதல் நடந்தது, ஆனால் அவர் உயிர் தப்பினார்.

கடந்த சில மாதங்களில் மட்டும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட முக்கியத் தீவிரவாதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் தாஹிர் அன்வரும் சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com