

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள வேளையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம டிரோன்கள் வட்டமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் வீடுகள் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த வாஷிங்டன் அமெரிக்க ராணுவ தளத்தின் வளாகத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையில் சுமார் 20 டிரோன்கள் கூட்டமாக இணைந்து, மிகக் குறைந்த உயரத்தில் பறப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
வர்ஜீனியாவில் உள்ள லாங்லி விமானப்படை தளம் போன்ற அதீத பாதுகாப்பு நிறைந்த ராணுவ மையங்களிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் டிரோன்கள் பறந்து வருகின்றன.
இந்தச் சம்பவங்கள் குறித்து எப்.பி.ஐ மற்றும் பென்டகன் உயர்மட்ட விசாரணையை தொடங்கியுள்ளன.
ஈரானுடனான மோதல் உச்சத்தில் இருப்பதால், அமெரிக்கத் தலைவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஈரான் டிரோன்களை ஏவியிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
மத்திய கிழக்கில் 7,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவிற்குள்ளேயே டிரோன்கள் ஊடுருவியுள்ளது.