பாகிஸ்தானில் சோகம்: 80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 40 பேர் பலி

பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
bus
Published on

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி-சோப்

நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ் குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அந்த பஸ்சில் பழுதடைந்த மற்றொரு பஸ்சின் பயணிகள் உள்பட 48 பயணிகள் இருந்தனர்.

டானாசாரில் பகுதியில் பஸ் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 80 அடி பள்ளத்தில் விழுந்தது.

தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது.

பஸ் விபத்தில் பலியானோருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com