நேபாள நாட்டின் பிரதமராக 35 வயது பாலேந்திர ஷா பதவியேற்பு! | Nepal

ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விட 49,614 வாக்குகள் அதிகம் பெற்று அவரைத் தோற்கடித்தார்.
நேபாள நாட்டின் பிரதமராக 35 வயது பாலேந்திர ஷா பதவியேற்பு! | Nepal
Published on

நேபாள நாட்டின் 47வது பிரதமராக 35 வயதேயான பாலேந்திர ஷா இன்று (மார்ச் 27) பதவியேற்றார்.

கடந்த ஆண்டு ஜென் இசட் போராட்டத்தால் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷீலா கார்கி நீடித்து வந்தார்.

இந்த சூழலில் புதிய அரசை தேர்தெடுத்தப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விட 49,614 வாக்குகள் அதிகம் பெற்று அவரைத் தோற்கடித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் நேபாளத்தின் இளம் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலேந்திர ஷா இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

1990ல் காத்மாண்டுவில் பிறந்த இவர், கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் Structural Engineering முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com