ரஷிய ராணுவத்தால் வலுக்கட்டாயமாக உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்களில் 32 உயிரிழப்பு - 12 பேர் மாயம்

அதிகம் சம்பளம் என்று ஆசை காட்டி இந்தியர்களை கவர்ந்திழுக்கும் முகவர்கள் அங்கு அவர்களை ரஷிய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைத்து போர் முனைக்கு அனுப்புகின்றனர்.
ரஷிய ராணுவத்தால் வலுக்கட்டாயமாக உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்களில் 32 உயிரிழப்பு - 12 பேர் மாயம்
Published on

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 2022 பிப்ரவரியில் தொடங்கி 4 ஆண்டுகளை தாண்டி நீடித்து வருகிறது.

உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் சேர்வதற்கு முயற்சி எடுத்ததை எதிர்த்து தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி ரஷியா போரை தொடங்கியது.

உக்ரைனுக்கு மேற்கு நாடுகளும், ரஷியாவுக்கு சீனா, வட கொரியா ஆகிய நாடுகளும் பாக்கபலமாக உள்ளன. இது இந்த போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே உக்ரைன் உடனான போரில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக ரஷியாவால் ஈடுபடுத்தப்படும் போக்கு தொடர்ந்து வருகிறது.

ரஷியாவிற்கு கட்டுமானம் உள்ளிட்ட வெவ்வேறு பணிகளில் அதிகம் சம்பளம் என்று ஆசை காட்டி இந்தியர்களை கவர்ந்திழுக்கும் முகவர்கள் அங்கு அவர்களை ரஷிய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைத்து போர் முனைக்கு அனுப்புகின்றனர்.

முறையான போர் பயிற்சி இன்றி போர்க்களத்தில் அவர்கள் உயிருக்கு அதிக ஆபத்து நேர்கிறது.

2025 டிசம்பரில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ரஷிய ஆயுதப் படைகளில் பணியாற்றியபோது 26 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏழு பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய தகவலின்படி, ரஷிய ராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

அண்மையில் அவ்வாறு உயிரிழந்தவர்கள் சிலரின் உடல்கள் இந்தியா கொண்டுவரப்பட்டன.

இதற்கிடையே ரஷிய ராணுவத்தில் உள்ள 35 இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com