

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போரினால் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றத்தால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. மேலும் எல்பிஜி உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியாதே இந்த தட்டுப்பாடுகளுக்கு காரணம்.
இந்தியாவில் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு குறைந்து வருவதால் ரஷியா தனது எண்ணெய்யை கூடுதலாக கொடுக்க முன்வந்தது.
ஆனால் அண்மையில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் ரஷியாவிடம் எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா வாக்குறுதி அளித்திருந்தது.
இதற்கிடையே போர் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தியா 30 நாட்களுக்கு மட்டும் ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஈரான் எண்ணெய் வாங்கவும் அனுமதி வழங்கியது.
2019 இல் அமெரிக்க தடையால் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய அமெரிக்கா, சமீபத்திய அனுமதியால் 7 ஆண்டுகளுக்கு பின் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் கச்சா எண்ணையுடன் 2 கப்பல்கள் அண்மையில் இந்தியா வந்து சேர்ந்தன.
ஆனால் அமெரிக்கா வழங்கிய 30 நாள் அனுமதி கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் காலாவதியானது. இதனால் கச்சா எண்ணெய் வாங்கலாமா, வேண்டாமா என்ற குழப்பம் நிலவியது.
இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட், 'ரஷியா மற்றும் ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை அமெரிக்கா நீட்டிக்காது' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னாதாக ஸ்காட் பெசன்ட், இந்தியர்கள் எங்கள் சிறந்த கூட்டாளிகள், நல்ல நடிகர்கள், முன்னர் நாங்கள் சொன்னதுபோல் ரஷிய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தினார்கள் என்பதால் இந்த சலுகையை தற்காலிகமாக வழங்க முன்வந்தாக கூறியிருந்தது சரசையானது குறிப்பிடத்தக்கது.