வெனிசுலா மீட்பு பணிகள்: 6 நாட்களுக்கு பிறகு 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு

தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் டெலிகிராம் வழியாக அனுப்பிய செய்தியில் தெரிவித்தார்.
வெனிசுலா மீட்பு பணிகள்: 6 நாட்களுக்கு பிறகு 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு
Published on

கடந்த வாரம் பேரழிவை ஏற்படுத்திய இரட்டை நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட வெனிசுலாவில், மீட்புப் பணிகள் தொடரந்து நடந்து வருகிறது. இந்த பணிகளின் போது ஜோர்டானிய மீட்பு பணியாளர்கள் ஒரு குழந்தையை மீட்டனர்; உயிர் பிழைத்ததாக அறிவிக்கப்பட்ட ஒரே குழந்தை இதுதான் என வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.

லா குவைரா மாநிலத்தில் உள்ள லாஸ் கோரல்ஸ் கார்டன் 1 கட்டிடத்தில் ஆறு நாட்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த கிளிபர் மோரன், ஜோர்டானை சேர்ந்த மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டதாக வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் டெலிகிராம் வழியாக அனுப்பிய செய்தியில் தெரிவித்தார்.

இரட்டை நிலநடுக்கங்கள்:

கடந்த புதன்கிழமை, ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் வெனிசுலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.

ரோட்ரிக்ஸால் 3 வயது குழந்தை என்றும், ஆனால் தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸால் 2 வயது குழந்தை என்றும் விவரிக்கப்பட்ட மோரன், பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நம்பிக்கையை விடக்கூடாது:

"இடிபாடுகளுக்கு அடியில் உயிருடன் இருப்பவர்களை தொடர்ந்து கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடக்கூடாது. இன்று அதிகாலையில், 2 வயது சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டு, தற்போது கராகஸில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறான்," என்று ஜார்ஜ் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

யுனிசெஃப் அனுப்பிய 47 மெட்ரிக் டன் மனிதாபிமான பொருட்கள் அடங்கிய சரக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) வெனிசுலாவை வந்தடைந்தது என்றும், இந்த உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க உதவும் என்றும் ஐ.நா. செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com