சீனாவில் பயங்கர தீ விபத்து: 19 பேர் உடல் கருகி பலி

ஐந்து மாடி கட்டடத்தின், 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீனாவில் பயங்கர தீ விபத்து: 19 பேர் உடல் கருகி பலி
Published on

சீனாவின் லியுலியாங் நகரில் உள்ள மாவட்டம் லிஷி. இந்த மாவட்டத்தில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடம் சீனாவின் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்கம் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com