

இதையடுத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் டோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
இதனையடுத்து டோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார். இந்நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் டோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில், ‘டோனி களத்தில் நின்றாலே உத்வேகம்தான். இவர் சிறந்த தேச பக்தர். கிரிக்கெட்டை தாண்டி நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர். கடந்த சில வாரங்களாக வீட்டில் ஓய்வில் இருந்ததால் இதனை எடுத்துக் காட்ட எனக்கு நேரம் கிடைத்தது.