தி.மு.க.வில் பதவி பறிக்கப்பட்ட விபி துரைசாமி இன்று பா.ஜ.க.வில் இணைகிறார்

விபி துரைசாமியிடம் இருந்து நேற்று திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று பாஜகவில் இணைய உள்ளார்.
விபி துரைசாமி - முக ஸ்டாலின்
விபி துரைசாமி - முக ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி. துரை சாமியை நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். துரை சாமிக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மரியாதை நிமித்தமாக தன்னை சந்தித்து, வி.பி. துரைசாமி வாழ்த்து தெரிவித்ததாக பாஜக தமிழக தலைவர் முருகன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், துரைசாமியை கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com