திருமாவளவன் கைதை கண்டித்து விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

பெரியகுளத்தில் திருமாவளவன் கைதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
திருமாவளவன் கைதை கண்டித்து விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
Published on

பெரியகுளம்:

தூத்துக்குடியில் ஸ்டெலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், தன்னார்வ தொண்டர்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் துப்பாக்கி சூட்டை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மறியல் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பொருளாளர் ரபீக், நிர்வாகிகள் கனகராஜ், சுசிதமிழ்பாண்டி, மணிபாரதி, ஜோதிமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.#tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com