அமெரிக்க துணை அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

அமெரிக்காவின் துணை அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை
Published on

நியூயார்க்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது. ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் செய்தி தொடர்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் வெள்ளை மாளிகையில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ராணுவ விவகாரங்களை கவனிக்கும் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com