இந்திய-சீன மக்களின் அமைதிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்பும் டிரம்ப்

இந்தியா மற்றும் சீனா மக்களுக்கு அமைதியை கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி இதனை கூறினார்.
டிரம்ப்
டிரம்ப்
Published on

வாஷிங்டன் :

லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே நடந்த மோதல் காரணமாக இரு நாடுகளின் உறவில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்த பதற்றத்தை முழுமையாக தணிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா மக்களுக்கு அமைதியை கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி இதனை கூறினார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இது குறித்து அவர் கூறுகையில் “ஜனாதிபதி டிரம்ப் இந்திய மக்களை நேசிப்பதாக கூறினார். அதேபோல் சீனா மக்களையும் அவர் விரும்புகிறார். இருநாட்டு மக்களுக்கும் அமைதியை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்ய விரும்புகிறார்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com