புதுக்கோட்டையில் திமுகவின் ஆதிக்கம் தொடருமா? கள நிலவரம் கூறுவது என்ன?

புதுக்கோட்டையில் திமுகவிற்கே அதிக ஆதரவு உள்ளது.
புதுக்கோட்டையில் திமுகவின் ஆதிக்கம் தொடருமா? கள நிலவரம் கூறுவது என்ன?
Published on

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாக உள்ளன.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுக, வலுவான கூட்டணியுடன் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக போன்றவை) தேர்தலை எதிர்கொள்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் பாஜக, அமமுக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. சீமான் உடைய நாதக எப்போதும் போல தனித்து தேர்தலை சந்திக்கிறது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவரது ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மக்களிடம் மாலைமலர் தரப்பில் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மக்களிடம் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கேட்பில் திமுகவே அப்பகுதியில் முன்னணியில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com