இம்முறையும் கடலூரில் திமுக ஆதிக்கம் தொடருமா? மக்கள் கூறுவது என்ன?

புவனகிரி சட்டமன்ற தொகுதி பகுதியில் திமுகவிற்கே பெரும் ஆதரவு உள்ளது.
இம்முறையும் கடலூரில் திமுக ஆதிக்கம் தொடருமா? மக்கள் கூறுவது என்ன?
Published on

இந்நிலையில் மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திற்குட்ட புவனகிரி சட்டமன்ற தொகுதி பகுதியில் சிலரிடம் எந்த கட்சிக்கு ஆதரவு என கேட்கப்பட்டது.

அதில் பெரும்பாலானோர் திமுகவிற்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இம்முறை அங்கு திமுக வர வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது அதிமுகவைச் சேர்ந்த அருண்மொழித்தேவன் அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் இருபெரும் திராவிட கட்சிகளில் ஒன்றான திமுக தற்போது ஆட்சியில் இருக்கிறது. தொடர்ந்து திமுக 2.0 ஆட்சி நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறுபுறம் தங்கள் கட்சி ஆட்சியமைக்க மும்முரம் காட்டிவருகிறது அதிமுக.

இவற்றிற்கெல்லாம் மாற்று என புதிதாக குதித்துள்ள தவெக தாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என கூறிவருகிறது. நாதக சீமானும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். இதனிடையே ஊடகங்கள் எந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்புகளை தொடங்கியுள்ளன.

பெரும்பாலும் இம்முறையும் திமுக - அதிமுக இடையேதான் போட்டி என்றாலும், தவெக சில தொகுதிகள் வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இத்தேர்தல் அரசியல் தலைவர்களைவிட மக்களுக்கே பெரும் ஆர்வத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திற்குட்ட புவனகிரி சட்டமன்ற தொகுதி பகுதியில் சிலரிடம் எந்த கட்சிக்கு ஆதரவு என கேட்கப்பட்டது.

அதில் பெரும்பாலானோர் திமுகவிற்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இம்முறை அங்கு திமுக வர வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது அதிமுகவைச் சேர்ந்த அருண்மொழித்தேவன் அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com