

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பெரும் ஆதரவைக் கொண்டிருந்தாலும், புதிதாக வந்துள்ள தவெகவிற்கும் ஆதரவு பெருகியுள்ளது. விஜய்யின் தவெக இத்தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கருத்துக் கணிப்புகளிலும் தவெகவிற்கு தனிப்பெரும் ஓட்டு வங்கியே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிதம்பரம் தொகுதி மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டது.
இதில் திமுகவிற்கும், தற்போது வந்த தவெகவிற்கும் சம அளவு போட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இத்தொகுதியில் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுகிறார்.
எப்போதும் மக்களவை தொகுதி, சட்டமன்ற தொகுதி என எதைப் பார்த்தாலும் சிதம்பரத்தில் திமுக-விசிக கூட்டணிக்கு ஒரு பெரும் ஆதரவு இருக்கும். இந்நிலையில் அங்கு தவெகவிற்கு அதே அளவு ஆதரவு பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது.