கரூரில் வீசும் தி.மு.க. அலை... த.வெ.க.விற்கு வெற்றி வாய்ப்பு உண்டா?

கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுகவிற்கே அதிக ஆதரவு உள்ளது.
கரூரில் வீசும் தி.மு.க. அலை... த.வெ.க.விற்கு வெற்றி வாய்ப்பு உண்டா?
Published on

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

புதிதாக கட்சித் தொடங்கிய விஜய் தான்தான் திமுகவிற்கு போட்டி என்றுக் கூறினாலும் திமுகவிற்கு போட்டியாக அதிமுக தலைமையிலான கூட்டணியே உள்ளது என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மக்களிடையே மாலைமலர் தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் கேட்கப்பட்ட கருத்துகளில் அங்கு திமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் தவெக உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.வாக திமுகவின் சிவகாமசுந்தரி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com