தாய்லாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஸ்பெஷல் விசா அறிமுகம்

5 ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் தாய்லாந்திற்கு வந்து செல்லலாம்
தாய்லாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஸ்பெஷல் விசா அறிமுகம்
Published on

சுற்றுலா பயணிகள் தங்களின் விடுமுறையை செலவிடவும், வேலைப்பழு நிமித்தமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தை குறைக்கவும், அவர்கள் செல்லும் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக தாய்லாந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கென்று சிறப்பம்சம் கொண்ட ஒரு விசாவை தாய்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த விசாவில், சுற்றுலா பயணிகள் ஐந்து ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் தாய்லாந்திற்கு வந்து செல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்திற்கு வேலை செய்ய வருபவர்களையும், தொழில்களை கற்கவும், கலாச்சார நிகழ்வுகளை கற்கவும் வரும் பயனாளர்களை, ஊக்குவிக்கும் வகையில் இந்த குறிப்பிட்ட விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசா மூலம் தாய்லாந்திற்கு வரும் நபர்கள், 180 நாட்கள் தொடர்ந்து இங்கேயே வசித்து, தங்களுக்கு பிடித்த முறையில் நேரத்தை செலவிடலாம் என்றும் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com