உச்ச நீதிமன்ற வழக்குகள் Video Conferencing மூலம் மட்டுமே விசாரணை

எரிவாயு நெருக்கடியை குறைப்பதற்கு திங்கள், வெள்ளி கிழமைகளில் 50 சதவீத ஊழியர்களுடன் நீதிமன்றம் செயல்படும்
உச்ச நீதிமன்ற வழக்குகள் Video Conferencing மூலம் மட்டுமே விசாரணை
Published on

மேற்காசிய போர் நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், செலவினங்களை குறைக்கும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, நீதிமன்ற வழக்கு விசாரணை முறையை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசாரணைக்கு வரும் வழக்குகள் காணொளி காட்சி வாயிலாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு எந்தவொரு அசெளகரியமும் ஏற்படாத வகையில், நிலையான காணொளி இணைப்புகள் வழங்கப்படுவதை பதிவகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பில் மறு உத்தரவு வரும் வரை, கிளை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வரை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மீதமுள்ள பணியாளர்கள் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அலுவலகத்தில் இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com