

ஐபிஎல் 2026 தொடரின் 32வது லீக் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
ராஜஸ்தான் பவர்பிளே ஓவர்களிலேயே முக்கிய விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் லக்னோ அணியின் ஃபீல்டிங் சிறப்பாக அமைந்தது. இதனால் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது ராஜஸ்தான். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் குவித்தார். லக்னோ தரப்பில் முகமது ஷமி, ப்ரின்ஷ் யாதவ், மொஷின் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 160 ரன்களை இலக்காக கொண்டு லக்னோ பேட்டிங்கை தொடர உள்ளது. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
லக்னோ அணி தொடக்க ஆட்டத்தில் தோற்றாலும், அடுத்த இரு ஆட்டங்களில் வென்றது. இருப்பினும், அடுத்தடுத்து சந்தித்த தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர தீவிரமாகப் போராடி வருகிறது.