தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகிறார் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

முன்னாள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எங்கள் நோக்கம் அல்ல என அமைச்சர் ஆதவ் பேட்டி
தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகிறார் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “முன்னாள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. தோல்வியின் விரக்தியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் குறித்து தவறான விமர்சனத்தை கூறிவருகிறார்.

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது, அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு தெருவில் இருக்கக்கூடிய தமிழக வெற்றி கழக தொண்டர்கள் காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்க கூறியுள்ளோம்.

இன்று இரவிலிருந்தே போர்க்கால முறையில் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கூறியுள்ளோம்.

மேலும் காவல்துறைக்கு எந்தவித இடையூறும் இன்றி முழு ஒத்துழைப்பும், எங்கள் தரப்பிலிருந்து தரப்படும்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com