மானாமதுரையில் திமுகவா? தவெகவா? மக்கள் கருத்து

மானாமதுரை பகுதியில் திமுக - தவெக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மானாமதுரையில் திமுகவா? தவெகவா? மக்கள் கருத்து
Published on

தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தற்போது தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நடிகர் விஜயின் த.வெ.க. கட்சி முதல் முறையாக தேர்தலை சந்திப்பதை அடுத்து அவரது கட்சி எத்தனை சதவீதம் வாக்குகளை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மாலைமலர் தரப்பில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் எடுக்கப்பட்ட மக்கள் பைட்டில், அங்கு திமுகவிற்கும், தவெகவிற்கும் சரிசமமான ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் இத்தேர்தலில் அங்கு இரு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளுக்கு அடுத்து அதிமுக உள்ளது. இருப்பினும் தேர்தல் முடிவுகள் மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com