தமிழகத்தில் குறைவாக இருந்த 10 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் அதிகரிப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது ஆய்வின் மூலம் தெரிய வந்ததையடுத்து அந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மே மாதத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அரசின் தீவிர நடவடிக்கையால் ஜூன் மாதம் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. நோய் தொற்றுக்கு ஆளானவர்களை ஆய்வு செய்யும் பணி ஜூலை மாதம் நடந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வை மேற்கொண்டது. 22 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தது தெரிய வந்தது.

சென்னையில் 94 சதவீதம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 96 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது ஆய்வின் மூலம் தெரிந்தது.

இதையடுத்து அந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. தடுப்பூசி போடும் பணி அங்கு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் ஐ.சி.எம்.ஆர். “செரோ” சர்வேயை மேற்கொண்டது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த 10 மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த மாவட்டங்களில் 70 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது ஆய்வின் மூலம் தெரிந்தது. அந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து தற்போது அந்த 10 மாவட்டங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 64 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. 75 சதவீத பேருக்கு செலுத்திவிட்டால் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பில்லை. அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com