

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.
காலை 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதியம் 12.39 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்த அவர், பட்ஜெட்டுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.