மேற்கு வங்க தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஸ்வீட் உடன் ஜால்முரியும் வழங்கப்படும்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி சாலையோரக் கடையில் ஜால்முரி வாங்கி சாப்பிட்டதை மம்தா பானர்ஜி விமர்சித்த நிலையில் பிரதமர் மோடி, வெற்றி கொண்டாட்டத்தின்போது வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஸ்வீட் உடன் ஜால்முரியும் வழங்கப்படும்: பிரதமர் மோடி
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் சாலையோரக் கடை ஓர காரணமான நொறுக்குத்தீனியான ஜார்முரி பிரபலம் அடைந்துள்ளது.

முதற்கட்ட தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராம் சென்றிருந்தார். அப்போது திடீரென சாலையோர கடைக்கு சென்று ஜால்முரி வாங்கினார். இதனை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்திருந்தது.

இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்காக இன்று கிருஷ்ணாநகர் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

ஜால்முரி சிலருக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக கேள்விபடடேன். நான் ஜால்முரி சாப்பிட்டேன். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் அதன் காரத்தை உணர்ந்திருக்கிறது.

மே 4-ந்தேதி வெற்றிக் கொண்டாடத்தின்போது ஸ்வீட்ஸ் மற்றும் ஜால்முரி வழங்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜால்முரி வாங்கியது திட்டமிடாதது என்றபோது, அங்கே கேமராக்கள் வந்தது எப்படி?. முழு நிகழ்வும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று மம்தா பானர்ஜி விமர்சித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com