

தமிழ்நாட்டில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சி ஆட்சி அமைத்தால் யார் யார் அமைச்சரவையில் இடம்பெறுவார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று வெற்றிப் பெற்ற உறுப்பினர்களுடன் விஜய் 3 மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் அமைச்சர்கள் பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை விவகாரத்தை தான் பார்த்துக்கொள்வதாகவும் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன்மூலம் தவெக அமைச்சரவையின் உத்தேச பட்டியல் தயார் என கூறப்படுகிறது. அதன்படி புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நிர்மல்குமார், சரவணன், முகமது பர்வேஸ், விஜய் சரவணன், கல்லாணை, விஜயலட்சுமி, பிரபு, பாலாஜி, சத்யபாமா, ராஜ்மோகன், ஜேடிசி பிரபாகர், வி.எஸ்.பாபு, சம்பத்குமார், மரிய வில்சன், சபரிநாதன், தமிழன் பார்த்திபன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.