சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியது ஏன்?- விளக்கத்தை மீண்டும் பதிவிட்ட ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை விளக்கத்தை அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட நிலையில் அதனை ஆளுநர் மாளிகை நீக்கியது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன.
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியது ஏன்?- விளக்கத்தை மீண்டும் பதிவிட்ட ஆளுநர் மாளிகை
Published on

சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து சென்ற நிலையில் இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.

ஆளுநர் மாளிகை விளக்கத்தை அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட நிலையில் அதனை ஆளுநர் மாளிகை நீக்கியது.

இந்நிலையில் ஆளுநர் வெளியேறியது தொடர்பான விளக்கம் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ராஜ்பவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சர் அவர்களிடமும் சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com