முதலமைச்சர் பதவி யாருக்கு? திமுக தவெக போட்டியா? அசால்ட் காட்டிய அலமாதி மக்கள்

சட்டமன்ற தேர்தலை ஒட்டி அலமாதி தொகுதியில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops நடத்தினோம்.
முதலமைச்சர் பதவி யாருக்கு? திமுக தவெக போட்டியா? அசால்ட் காட்டிய அலமாதி மக்கள்
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த 4 கட்சியிலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் மீதே பலரது கவனமும் இருக்கிறது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி அலமாதி தொகுதியில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops மாலைமலர் தரப்பில் இருந்து நடத்தப்பட்டது.

அதன்படி அலமாதி பகுதி மக்களிடம் 39 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் ஏன் போடுவீர்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பட்டது. அந்த கேள்வியின் முடிவில் அதிகபட்சமாக திமுகவிற்கு 19 பேர் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.

அதற்கு அடுத்தபடியாக தவெக கட்சிக்கு 16 பேரும் அதிமுகவிற்கு 6 பேரும் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் என்று யாரும் கூறவில்லை. ஒருவர் மட்டும் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதாக தெரிவித்தார்.

இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com