தாம்பரம்-நியூ தின்சுகியா இடையே வாராந்திர சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06016), புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் மாலை 4 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரம்-நியூ தின்சுகியா இடையே வாராந்திர சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம்- நியூ தின்சுகியா இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தாம்பரத்தில் இருந்து வருகிற 13,20,27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு அசாம் மாநிலம் நியூ தின்சுகியா ரெயில் நிலையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06015), புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு நியூ தின்சுகியா சென்றடையும். மறுமார்க்கமாக, நியூ தின்சுகியாவில் இருந்து வருகிற 16,23,30 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06016), புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் மாலை 4 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com