"பணியாளர் நியமனத்தில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டோம்!"– திமுக அரசை சாடிய அமைச்சர் நிர்மல்குமார்

மின்சாரத்துறை 15000 பேரை வேலைக்கு எடுக்க முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
TN Minister Nirmal Kumar
Published on

தமிழ்நாடு மின்துறை நிலை குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 343 பேரை மட்டுமே வேலைக்கு எடுத்துள்ளனர்.

திமுக ஆட்சியில் வருவாய், செலவு, கடன் அதிகரித்தாலும், வெறும் 343 பேரை மட்டுமே வேலைக்கு எடுத்துள்ளனர்.

மின்சாரத்துறையில் பணியாளர் நியமனத்தில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளோம்.

தமிழகத்தில் அதிக பணிச்சுமை உள்ள துறையாக மின்சாரத்துறை உள்ளது. இருக்கும் இடங்களிலேயே மேனேஜ் செய்ய முடியாத நிலை உள்ளது. ஒருவர் பார்க்கும் வேலையை 10 பேர் செய்கின்றனர்.

மின்சாரத்துறை 15000 பேரை வேலைக்கு எடுக்க முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் கேங்மேன் 5000 பேர் உள்பட 20,000 பேர் மின்சாரத்துறையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

செந்தில் பாலாஜி நிறைய அறிவிப்புகள் தான் கொடுத்தார், ஆனால் எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com