Seeman-| 'நா.த.க.-வுக்கு ஓட்டு போடுங்க.. இல்ல வாய்க்கரிசி போட்டுவிடுங்கள்..!- சீமான் விரக்தி பேச்சு

சீமான் இன்று பெரம்பலூரில் பரப்புரை மேற்கொண்டார்.
Seeman-| 'நா.த.க.-வுக்கு ஓட்டு போடுங்க.. இல்ல வாய்க்கரிசி போட்டுவிடுங்கள்..!- சீமான் விரக்தி பேச்சு
Published on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் விறுவிறுப்பாக பரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கிறது.

கட்சி சார்பில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் சீமான் இன்று பெரம்பலூரில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, மக்கள் மத்தியில் விரக்தியாக பேசினார்.

அவர் கூறியதாவது:-

நீ எனக்கு ஓட்டு போட்டால் போடு இல்லைனா போ, உடம்புல தெம்பு இருக்கிற வர இதே இடத்துல நின்னு கத்தி கத்தி செத்துக்கூட போவேன்.

ஆனா சீட்டுக்கும் நோட்டுக்கும் யார்கிட்டயும் கை கட்ட மாட்டேன். சரணடைந்து வாழ்வதற்கு சண்டையிட்டு சாவதே மேல்.

ஒன்று இந்த முறை நாதகவுக்கு வாக்களியுங்கள், இல்லையென்றால் வாய்க்கரிசி போட்டுவிடுங்கள்.

உங்களுக்காகதான் பேசுகிறேன் என்பதை புரிந்து கொள்ளாவிட்டால் மக்களை யாராலும் காப்பாற்றவே முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com