NTK | தேர்தல் நடத்தை விதி மீறல்- நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

NTK | தேர்தல் நடத்தை விதி மீறல்- நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு
Published on: 

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாகக அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம அனுமதியின்றி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரியான வேளாண்மை துறை உதவி இயக்குனராக பணியாற்றி வரும் உதயகுமார் என்பவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள சரவணன் என்பவர் மீது 2 பிரிவுகளின் கீழ் ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறி கட்சி நிகழ்ச்சி நடத்திய நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் மீது தமிழகத்தில் முதல்முறையாக நடத்தை விதிமுறைகளை மீறியதாக இந்த சட்டமன்ற தேர்தலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com