

சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பெரம்பூரை தொடர்ந்து கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்தார்.
கொளத்தூரில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் போலீசார் கூறியதை அடுத்து 2 நிமிடங்களில் விஜய் பேச்சை முடித்துக்கொண்டார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் போலீஸ் அனுமதித்த இடத்திற்கு 100 மீட்டர் முன்பே விஜய் வாக்கு சேகரித்தார்.
அசம்பாவிதம் தவிர்க்க போலீசார் அறிவுரையை ஏற்று 2 நிமிடங்களில் விஜய் பேச்சை முடித்துக்கொண்டார்.
பெரம்பூர், கொளத்தூரை தொடர்ந்து வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்யப்பட இருந்த நிலையில் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை, தவெக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," விஜய்க்கு சரியான பாதுகாப்பு கொளத்தூரில் கொடுக்கவில்லை.
விஜய் இன்னொரு நாள் தனியாக வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்வார்" என்றார்.