மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துகள்: விஜய் வசந்த்

மொஹரம் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் மீண்டும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய் வசந்த்
Published on

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற எம்.பி. விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இஸ்லாமிய புத்தாண்டின் தொடக்கமாகவும், தியாகம், உண்மை, நீதி மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த கருத்துகளை நினைவூட்டுவதாகவும் விளங்கும் மொஹரம் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாள் தியாக உணர்வும், அநீதிக்கு எதிராக துணிச்சலுடன் நிற்கும் மனப்பக்குவமும், மனிதகுலத்திற்கு என்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கின்றன.

மொஹரம் நமக்கு ஒற்றுமை, சகோதரத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.

இந்த புனித நாளில், அமைதி, அன்பு மற்றும் வளம் அனைவரின் இல்லங்களிலும் நிலவட்டும். நல்லிணக்கமும் மனிதநேயமும் நிறைந்த சமுதாயம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

மொஹரம் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் மீண்டும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com