

மங்கோலியாவில் 11-வது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்ளும் வீரருக்கு விஜய்வசந்த் எம்பி நிதியுதவி அளித்தார்.
2026-ஆம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெறவுள்ள, 11-வது ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் 63 கிலோவுக்குக் கீழ் K41 பிரிவு போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் பகுதியில் உள்ள பிளசிங் சஜு தேர்ச்சி பெற்றுள்ளார். அங்கு பங்கேற்க செல்ல இருக்கும் அவருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வாழ்த்துகள் தெரிவித்து, போட்டியில் பங்கு பெறுவதற்கான ஸ்பான்சர் தொகையான ரூ.4.30 லட்சம், தனது சொந்த செலவில் நிதியுதவியாக வழங்கினார்.