TN Assembly Election| திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார் விஜய்

விஜய் அன்றைய தினம் காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
TN  Assembly Election| திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார் விஜய்
Published on

திருச்சி:

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி உள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் விஜய் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக விஜய் அன்றைய தினம் காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com