நாளை காலை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்?

நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
நாளை காலை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்?
Published on

தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது ஆதரவு கடிதங்களை அளித்தன. இதையடுத்து, தவெகவின் பலம் 117 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஐ.யூ.எம்.எல். கட்சியும் ஆதரவு அளித்தது.

தவெக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், ஐ.யூ.எம்.எல் கட்சிகளின் கடிதங்களை ஆளுநர் அர்லேகரிடம் அளித்தார். தொடர்ந்து தன்னை ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி ஏற்பதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கில் நாளை காலை 11.30 மணிக்கு தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது.

X

Maalai Malar
www.maalaimalar.com