திருச்சியில் ரோடு ஷோ - கீழே விழுந்தவரிடம் நலம் விசாரித்த விஜய்

பிரசார வாகனத்தில் ஏறி நின்று உற்சாகமாக கையசைத்து செல்லும் விஜயை கண்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
திருச்சியில் ரோடு ஷோ - கீழே விழுந்தவரிடம் நலம் விசாரித்த விஜய்
Published on

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

சென்னை பெரம்பூர் தொகுதியில் கடந்த 30-ந்தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.

திருச்சி மேலப்புதூரில் தவெக தலைவர் விஜயை பார்க்க தொண்டர்கள் திரண்டு வந்தனர்.

பிரசார வாகனத்தில் ஏறி நின்று உற்சாகமாக கையசைத்து செல்லும் விஜயை கண்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

விஜயை பின்தொடர்ந்து பைக்கில் வந்த தொண்டரும் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் தவறி கீழே விழுந்தனர். இதை பார்த்த விஜய் உடனடியாக பிரசார வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்தார்.

கீழே விழுந்த இளைஞருக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா? என விசாரித்த விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com